

இந்தியாவுக்கு வரும் நவாஸ் ஷெரீபைக் கண்டித்து திங்கள் கிழமைமுதல் உண்ணாவிரதம் இருப்பேன் என்று பாகிஸ்தான் ராணுவத்தால் கொல்லப்பட்ட இந்திய ராணுவ வீரர் ஹேம் ராஜின் மனைவி தர்மாவதி தெரிவித் துள்ளார்.
கடந்த ஆண்டு ஜனவரியில் காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் எல் லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், இந்திய வீரர் ஹேம்ராஜ் சிங்கின் தலையைத் துண்டித்து எடுத்துச் சென்றனர். இந்த கொடூரச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் திங்கள்கிழமை டெல்லி வருகிறார். இதற்கு இந்திய ராணுவ வீரர் ஹேம்ராஜ் சிங்கின் மனைவி தர்மாவதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: பாகிஸ்தானைக் கண்டித்து நரேந் திர மோடி ஆவேசமாகப் பேசிய தைக் கேட்டு அவருக்கு ஆதர வாக வாக்களித்தேன். ஆனால் மோடியின் பதவியேற்பு விழா வில் பங்கேற்க பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அழைக் கப்பட்டுள்ளார். இது இந்திய வீரர் களின் தியாகத்துக்கு இழைக்கப் பட்ட அநீதி.
எனது கணவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டதற்கு பாகிஸ் தானுக்கு தகுந்த பாடம் புகட்டப் படும் என்று அப்போதைய ராணுவ தளபதி என்னிடம் உறுதி அளித்தார். ஆனால் இதுவரை பாகிஸ்தான் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.
இப்போது மோடியின் பதவி யேற்பு விழாவில் பங்கேற்க அந்த நாட்டுப் பிரதமர் டெல்லி வருகிறார். இதைக் கண்டித்து திங்கள்கிழமை முதல் உண்ணாவிரதம் இருப் பேன். ஷெரீப் இந்தியாவில் இருக் கும்வரை எனது உண்ணாவிரதம் தொடரும். எனது கணவரின் மரணத்துக்கு ஷெரீப் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.