

மகாராஷ்டிராவில் மாட்டிறைச்சிக்குத் தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து மாட்டிறைச்சி வியாபாரிகள் செய்திருந்த மனுவை மும்பை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.
மகாராஷ்டிர விலங்குகள் பாதுகாப்புத் திருத்தச் சட்டத்தை அமல் செய்யக் கோரும் மனுவை எதிர்த்து மும்பை புறநகர் மாட்டிறைச்சி வியாபாரிகள் சங்கத்தினர் தலையீடு கோரி மனு செய்திருந்தனர்.
இந்த மனு இன்று நீதிபதிகள் வி.எம்.கனாடே, மற்றும் ஏ.ஆர்.ஜோஷி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது, அப்போது, “இது குறித்த புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளதால், அதிகாரிகள் முறைப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதாவது மாடுகள் கொல்லப்படுவதற்கு எதிரான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
இதனை கவுரவப்பிரச்சினையாகவோ மதம் சார்ந்த பிரச்சினையாகவோ கருத வேண்டாம்.” என்றார்.
இதனையடுத்து வியாபாரிகள் மனுவை நிராகரித்து உத்தரவிட்டனர் நீதிபதிகள்.