சிக்கிய பயணிகளை விமானம் மூலம் மீட்க காஷ்மீர் அரசு நடவடிக்கை

சிக்கிய பயணிகளை விமானம் மூலம் மீட்க காஷ்மீர் அரசு நடவடிக்கை
Updated on
1 min read

மழை, நிலச்சரிவு காரணமாக ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்ட நிலையில், சிக்கிய பயணிகளை விமானம் மூலம் மீட்க காஷ்மீர் அரசு ஏற்பாடு செய்யவுள்ளது.

சுமார் 2000 பேர் சிக்கியுள்ளனர். இவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் உணவு வழங்கி பாதுகாத்து வருகிறது.

கடந்த இரண்டு நாட்களாக பெய்துவரும் கனமழைக்கு பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமான 80 வாகனங்கள் சேதமடைந்துள்ளன. சனிக்கிழமை மாலை முதல் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.

ஸ்ரீநகர்-குல்மார்க், ஸ்ரீநகர்-குப்வாரா, ஸ்ரீநகர்-பந்திப்பூரா இடையேயான சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

இதில் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டதால் 2000 பேர் வெளியேற முடியாமல் சிக்கித் தவித்து வருகின்றனர்.

காஷ்மீர் மாநில அமைச்சர் அப்துல் கனி கோலி, மாவட்ட நிர்வாகத்தினை அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்க அறிவுறுத்தியுள்ளார்.

வானிலை சரியானவுடன் இவர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல விமான ஏற்பாடு செய்யப்படும் என்று அவர் மக்களுக்கு உறுதி அளித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in