

டெல்லியில் உள்ள சீன தூதரகத்துக்கு அருகே போராட்டம் நடத்திய திபெத்திய அகதிகள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
திபெத்திய எழுச்சி நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) டெல்லியில் உள்ள சீன தூதரகத்தை முற்றுகையிட்டு, அந்நாட்டு விடுதலையை வலியுறுத்தி திபெத்திய அகதிகள் போராட்டம் நடத்தினர்.
திபெத்துக்கு ஆதரவான கோஷங்களை எழுப்பிய அவர்கள் தங்களது முகத்தில் கருப்பு முகமூடி அணிந்தும், கழுத்தில் திபெத்திய கொடியை பிரதிபலிக்கும் வர்ணங்களையும் பூசியிருந்தனர். போராட்டக்காரர்கள் அனைவரையும் டெல்லி போலீஸார் கைது செய்தனர்.