இந்தியா
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது: கிரண் ரிஜிஜு
கடந்த 2013 ஆண்டு இருந்த நிலவரத்தை விட இந்த ஆண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
23- வது அகில இந்திய தடய அறிவியல் கழக தொடக்க விழாவில் கலந்து கொண்ட உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு பேசும்போது, "பெண்களுக்கு எதிராக ஏற்படும் குற்றங்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. 2013-ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது குற்ற வழக்குகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.
இதனால் பெண்களுக்கு எதிரான குற்றங்களை பதிவு செய்ய அதிகாரிகள் தவறிவிடக் கூடாது. தீர்வுகளை மட்டுமே ஏற்படுத்த வேண்டும்.
வருங்காலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை குற்றங்களையும் தடுக்க வேண்டிய முயற்சிகளையும் ஆலோசனைகளையும் மேற்கொள்வதே இதிலிருந்து மீள்வதற்கான வழி" என்றார் ரிஜிஜு.
