

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், பெனுமூர் மண்ட லத்தை சேர்ந்த இளம்பெண்ணை (19) கடந்த சனிக்கிழமை மர்ம நபர்கள் கடத்தி பாலியல் பலாத் காரம் செய்து கொலை செய்தனர்.
இது தொடர்பாக நேற்று பட் ஜெட் கூட்டத்தொடரில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் போது பேசிய முதல்வர் சந்திரபாபு நாயுடு, “சட்டம்-ஒழுங்கை மீறுபவர்கள் யாராக இருப்பினும் கட்டாயமாக தண்டிக்கப்படுவர். பெண்கள் மீது வன்கொடுமை, பாலியல் பலாத்காரம் போன்ற குற்றங்களில் ஈடுபடுவர்களை இந்த அரசு கடுமையாக தண்டிக்கும். பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுபவர்கள் மீது `நிர்பயா’ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும். இவர்களுக்கு வழங்கும் கடுமையான தண்டையை பார்த்து மற்றவர்களுக்கு தவறு செய்யக் கூடாது என்கிற பயம் வர வேண்டும். சித்தூர் மாவட்டத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு அரசு சார்பில் ரூ. 5 லட்சம் உதவி தொகை வழங்கப்படும். இது தொடர்பாக குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்” என்றார்.