

ஹோலிப் பண்டிகையை ஒட்டி பொதுமக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "ஹோலி- வண்ணங்கள் அலங்கரிக்கும் இந்த வசந்த விழா நாட்டின் வேற்றுமையில் ஒற்றுமை தன்மையை அடையாளப்படுத்திகிறது. இந்த விழா உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்தட்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி கூறியுள்ள வாழ்த்துச் செய்தியில், "வசந்த கால வருகையைக் கொண்டாடும் ஹோலிப் பண்டிகை இந்தியா முழுவதும் வகுப்பு உள்ளிட்ட அனைத்து பிரிவினைகளையும் கடந்து கொண்டாடப்படுகிறது. இவ்விழா தேச ஒற்றுமையின் அடையாளம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.