மேகேதாட்டு அணை விவகாரத்தை தமிழக கட்சிகள் அரசியலாக்குகின்றனர்: சித்தராமையா

மேகேதாட்டு அணை விவகாரத்தை தமிழக கட்சிகள் அரசியலாக்குகின்றனர்: சித்தராமையா
Updated on
1 min read

மேகேதாட்டுவில் கர்நாடகம் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக கட்சிகள் அரசியலாக்குவதாக அம்மாநில முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் கர்நாடகம் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது.

இதற்கு கர்நாடக தரப்பு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. தமிழகத்தில் நடத்தப்பட்ட முழு அடைப்பு போராட்டத்தை கண்டித்தும் முதல்வர் பன்னீர்செல்வத்தின் உருவ பொம்மையை எரித்தும் கர்நாடகத்தில் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் இந்த போராட்டத்தை தமிழக கட்சிகள் அரசியலாக்கிவிட்டதாகவும் இதனை கர்நாடகம் எதிர்கொள்ளும் என்றும் அம்மாநில முதல்வர் சித்தாராமையா தெரிவித்தார். அவர் மேலும் கூறும்போது, "அரசியல் நோக்கத்துக்காகவே காவிரி ஆற்றின் குறுக்கே அமைய இருக்கும் அணைக்கு தமிழக கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இதனை சட்ட ரீதியிலும் மற்ற வழிகளிலும் எதிர்கொள்ள கர்நாடகத்துக்கு தெரியும். காவிரி மேலாண்மை ஆணயத்தின் உத்தரவுபடி நாங்கள் முதலிலிருந்தே தமிழகத்துக்கு 192 டிஎம்சி அளவில் தண்ணீரை பகிர்ந்தளித்து வருகிறோம்.

நாங்கள் இப்போது எங்களது மாவட்டத்துக்குள் தான் அணை கட்டுகிறோம். இதனால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இதனை அவர்கள் அரசியல் நோக்கத்துக்காகவே செய்கின்றனர். இதனை நாங்கள் அதன் வழியில் எதிர்கொள்வோம்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in