

நாட்டில் முதல்முறையாக இ-ரேஷன் சேவை டெல்லியில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டத்தை டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தொடங்கிவைத்தார்.
இதன்மூலம் இணையதளம் மூலமாகவே புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். ரேஷன் அட்டை வழங்கப்பட்ட வுடன் அதனை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
மேலும் ரேஷன் பொருட்களின் இருப்பையும் இணையதளம் மூலமாகவே அறிந்து கொள்ள லாம். இதன் மூலம் பொது விநியோகத்தில் ஊழல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் பேசியபோது, ரேஷன் அட்டை தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் இ-ரேஷன் சேவை மூலம் தீர்வு காண முடியும் என்று தெரிவித்தார்.