

உத்தரப் பிரதேசத்தில் 40-க்கும் மேற்பட்டோருக்கு புதிதாக பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சக அறிக்கை குறிப்பிடுகிறது.
உத்தரப் பிரதேசத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 31 பேரில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் தலைநகர் லக்னோவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இந்நிலையில் சனிக்கிழமை நிலவரப்படி அங்கு புதிதாக 40-க்கும் அதிகமானோருக்கு நோய் பாதிப்பு உள்ளதாக மாநில சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதிதாக பாதிப்புள்ளாகியவர்கள் பரெய்லி, உன்னாவூ, அமேதி, மவு மற்றும் அலகாபாத்தை சேர்ந்தவர்கள் ஆவர். நோய் வேகமாக பரவி வருவதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.