

விசாகப்பட்டினத்தில் இருந்து செகுந்தராபாத் சென்ற ரயிலில் முதல் வகுப்பில் பயணம் செய்த பெண் பயணியிடம் இருந்து 1.49 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ரயில்வே போலீஸ் கூறும்போது, "நாக சேசு வேணு(50) என்ற பெண் தங்கம் வைத்திருந்த பையை தனது தலையணைக்கு அடியில் வைத்து உறங்கியுள்ளார்.
ரயில் வாரங்கல் நிலையத்தை அடைந்தபோது கண் விழித்த அந்தப் பெண் தனது பை காணாமல் போனதைக் கண்டுபிடித்தார். உடனடியாக டிக்கெட் பரிசோதகரிடம் புகார் அளித்தார்.
ரயில் செகுந்தராபாத் நிலையத்துக்கு வந்தபோது ரயில்வே போலீஸார் வழக்கு பதிவி செய்தனர். ரயில் புறப்பட்ட இடத்தில் இருந்து செகுந்தராபாத் வந்தடைந்தது வரை இடையில் விஜயவாடாவில் மட்டுமே நின்றுள்ளது. சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது" என்றார்.