

மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆகியோருக்கு எதிரான சர்ச்சைக் கருத்துகளைக் கூறிய உச்ச நீதீமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜுவைக் கண்டித்து மக்களவையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காந்தி பிரிட்டனின் கைக்கூலி, சுபாஷ் சந்திர போஸ் ஜப்பானிய கைக்கூலி என, கட்ஜு தனது வலைப்பூவில் எழுதியிருந்தார். இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்தது. நேற்று முன்தினம் மாநிலங்களவையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
மக்களவையில் நேற்று கட்ஜுவைக் கண்டித்து, மக்கள வைத் தலைவர் சுமித்ரா மகாஜன் தீர்மானம் கொண்டு வந்தார். அப் போது, “காந்தி, நேதாஜி இருவரின் தியாகமும், இந்திய சுதந்திரத்தில் அவர்களின் பங்களிப்பும் இணை யற்றது. இவர்களைப் பற்றிய கட்ஜு வின் கருத்து பொருந்தாத ஒன்று. கட்ஜுவின் கருத்தை இந்த அவை கண்டிக்கிறது” என்றார் அவர்.
கட்ஜு மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்.பி.க்கள் சிலர் வலியுறுத் தினர். பல்வேறு கட்சி உறுப்பினர் களும் கட்ஜுவைக் கண்டித்துப் பேசினர்.