

கேரளத்தில் விலங்குகளால் மனிதர்கள் தாக்குதலுக்கு உள் ளாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் சமீபகால மாக இங்கு மனித-விலங்கு மோதல் அதிகரித்துள்ளது என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி கவலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறிய தாவது: வனங்களுக்கு அருகே அமைந்துள்ள கிராமங்களில் மனித-விலங்கு மோதல் நிகழ்வுகள் தினந் தோறும் அதிகரித்து வருகின்றன. அந்தப் பகுதிகளில் பயிர்களைச் சேதப்படுத்துவதுடன் மனிதர்களை யும் விலங்குகள் தாக்கி வருகின் றன. நகரங்களிலோ, தெரு நாய்க ளால் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறார்கள்.
மனித உயிர்கள் விலை மதிக்க முடியாதவை என்பது உண்மை தான். அதனால்தான் இவ்வாறு விலங்குகளின் தாக்குதல்களில் இருந்து தப்பிக்க துப்பாக்கிகளை வைத்துக்கொள்ள அனுமதி அளித் துள்ளோம். வனவிலங்குகளைக் காப்பாற்ற வேண்டும் என்று நாம் எடுத்த நடவடிக்கையின் காரணமாக வனங்களில் தற்போது அவற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. எனவே அவை காட்டை விட்டு வெளியே வந்து மனிதர்களைத் தாக்க ஆரம்பித்துள்ளன.
அதேபோல தெரு நாய்களைக் கொல்வதற்கு சட்டத்தில் அனுமதி இல்லை. இவற்றின் எண்ணிக் கையைக் கட்டுப்படுத்துவதற்கு ஒரே வழி அவற்றுக்கு கருத்தடை செய்வதுதான். ஆனால் அது நிரந்தர தீர்வாகாது. எனினும், எங்களால் இயன்ற அளவு இவற்றைக் கட்டுப் படுத்த முயற்சிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.