இந்த ஆண்டில் 35,476 கிலோ செம்மரம் பறிமுதல்: கடத்தல்காரர்களின் சொத்து ஜப்தி செய்யப்படும் - திருப்பதி மாவட்ட எஸ்.பி. சுப்புராயுடு எச்சரிக்கை

இந்த ஆண்டில் 35,476 கிலோ செம்மரம் பறிமுதல்: கடத்தல்காரர்களின் சொத்து ஜப்தி செய்யப்படும் - திருப்பதி மாவட்ட எஸ்.பி. சுப்புராயுடு எச்சரிக்கை
Updated on
1 min read

திருப்பதி: திருப்​ப​தி​யில் உள்ள செம்மர தடுப்பு பிரிவு அலு​வல​கத்​தில் திருப்​பதி மாவட்ட எஸ்.பி. சுப்​பு​ரா​யுடு செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது:

சீனா, ஜப்​பான், மலேசி​யா, தாய்​லாந்து உட்பட பல வெளி​நாடு​களில் ஆந்திர செம்​மரங்​களுக்கு கிராக்கி உள்​ள​தால் சென்​னை, மங்​களூரு வழி​யாக கடத்​தப்​படு​கின்றன. கடத்தல் தொடர்​பாக 263 குற்​ற​வாளி​கள் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். மேலும் 52 பழைய குற்​ற​வாளி​களும் இந்த ஆண்டு கைது செய்​யப்​பட்​டனர். இவர்​களிட​மிருந்து 35,476 கிலோ எடை கொண்ட 1,872 செம்​மரங்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டன. 63 வாக​னங்​களும் பறி​முதல் செய்​யப்​பட்​டன.

24 மணி நேர​மும் அதிரடிப்​படை​யினர், வனத்​துறை​யினர் சேஷாசலம் வனப்​பகு​தி​யில் ரோந்து பணி​களில் ஈடு​பட்டு வரு​கின்​றனர். தின​மும் இந்த வனப்​பகு​தி​களில் குறைந்த பட்​சம் 10 கி.மீ வரை ரோந்து பணி​கள் நடை​பெறு​வதை வழக்​க​மாகக் கொண்​டுள்​ளோம்.

கடத்​தல்​காரர்​களின் சொத்​து​களை இனி சட்​டப்​படி ஜப்தி செய்​வோம். தமிழகம், கர்​நாட​கா, குஜ​ராத் மற்​றும் டெல்லி ஆகிய நகரங்​களில் பதுக்கி வைக்​கப்​பட்​டிருந்த ரூ.16.5 கோடி மதிப்​புள்ள செம்​மரங்​களை​யும் அதிரடிப்​படை இந்த ஆண்டு பறி​முதல் செய்​துள்​ளது. கடந்த 10 ஆண்​டு​களில் அதி​க​மாக தமிழகத்தைச் சேர்ந்த செம்மர கடத்​தல்​காரர்​கள் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். அடுத்​த​தாக ஆந்​தி​ரா, கர்​நாடக மாநிலங்​களைச் சேர்ந்​தவர்​களும் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்.

வரும் ஆண்​டு​களில் மாநிலங்​களுக்​கிடையே உள்ள அதி​காரி​களு​டன் இணைந்து செம்மரக் கடத்​தலை தடுக்க ‘ஆபரேஷன்’ கள் நடத்​தப்​படும். இவ்​வாறு எஸ்பி சுப்​பு​ரா​யுடு கூறி​னார்.

இந்த ஆண்டில் 35,476 கிலோ செம்மரம் பறிமுதல்: கடத்தல்காரர்களின் சொத்து ஜப்தி செய்யப்படும் - திருப்பதி மாவட்ட எஸ்.பி. சுப்புராயுடு எச்சரிக்கை
உ.பி.யில் பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில் மோசடி: ஆட்சியர்களிடம் விவசாயிகள் மனு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in