திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் தீ

திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் தீ
Updated on
1 min read

திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு காட்டுத் தீ வேகமாக பரவியது.

இதனால் பல ஏக்கர் பரப்பளவில் செம்மரங்கள் உட்பட பல்வேறு மரங்கள் தீயில் கருகின. மேலும் வன விலங்குகளும் தீக்கிரையாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.

ரேணிகுண்டா மண்டலத்தில் உள்ள சேஷாசல புரம், வெங்கடாபுரம், மற்றும் மாமண்டூர் ஆகிய பகுதியில் உள்ள வனப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து உடனடியாக தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் விரைந்து வந்த தீயணைப்பு படையினர், தேவஸ்தான வனக்காவலர்கள் ஆகியோர் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். காட்டுத் தீ ஊருக்குள் பரவி விடுமோ என பயந்து, இரவு முழுவதும் 3 கிராம மக்களும் பீதியடைந்து தூங்காமல் விழித்திருந்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in