

காங்கிரஸ் கட்சியின் 5 மாநிலத் தலைவர்கள் நீக்கப்பட்டு, புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அடுத்த மாதம் நடைபெறவுள்ள அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் ராகுல் காந்தியை கட்சியின் தலைவராக கொண்டுவருவதற்கான முயற்சியாக இது கருதப்படுகிறது.
இவ்வேளையில், ராகுல் காந்திக்கு நெருக்கமான, நம்பிக்கைக்குரிய உறுப்பினர்கள் 3 பேருக்கு பொதுச் செயலாளர்கள் பதவி வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக தி இந்துவுக்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலர் அளித்த தகவலில், முன்னாள் எம்.பி.,க்கள் ஜிதேந்திர சிங், மீனாட்சி நடராஜன், தற்போதைய காங்கிரஸ் எம்.பி. ராஜீவ் சத்தவ் ஆகியோருக்கு பொதுச் செயலாளர்கள் பதவி கிடைக்க வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி நேரடி தலையீட்டின் பேரில் இவர்கள் மூவருக்கும் இப்பதவி வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.