

மேற்கு வங்கத்தில் கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கவலை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் அலுவலக ட்விட்டரில், "மேற்குவங்கத்தில் கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தாலும், ஹரியாணா மாநிலம் ஹிஸார் மாவட்டத்தில் தேவாலயம் ஒன்று தாக்கப்பட்ட சம்பவத்தாலும் பிரதமர் ஆழ்ந்த கவலையில் உள்ளார். இந்த இரு சம்பவங்கள் குறித்தும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளிடம் அறிக்கை கோரியுள்ளார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குவங்க மாநிலம் நாடியா மாவட்டத்தைச் சேர்ந்த கங்னாபூரில், கொள்ளை கும்பல் ஒன்று 72 வயது கன்னியாஸ்திரியைப் பலாத்காரம் செய்தது.
கன்னியாஸ்திரிகள் தங்கியிருந்த கான்வென்ட்டில் இருந்து ரூ.12 லட்சத்தையும் அந்த கும்பல் கொள்ளையடித்து சென்றது. இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்தச் சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கவலை வெளியிட்டுள்ளார்.