

சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவன முறைகேடு வழக்கில் ஏப்ரல் 9-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என ஹைதராபாத் சிறப்பு நீதிமன்றம் நேற்று அறிவித்தது.
இவ்வழக்கை கடந்த 2009-ம் ஆண்டு பிப்ரவரியில் சிபிஐ விசாரிக்கத் தொடங்கியது. இதில் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதால், அதன் பங்குதாரர் களுக்கு ரூ. 14 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப் பட்டுள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் 3000 ஆவணங்களை சிபிஐ தாக்கல் செய்துள்ளது. மேலும் 226 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியிடப்படும் என நீதிபதி பி.வி.எல்.என். சக்ரவர்த்தி கடந்த டிசம்பர் மாதம் அறிவித்தார்.
இந்நிலையில் இதனை ஏப்ரல் 9-ம் தேதிக்கு நீதிபதி நேற்று தள்ளிவைத்தார்.
சத்யம் கம்ப்யூட்டர்ஸ் முறை கேடு வழக்கில் அந்த நிறுவனத்தின் தலைவராக இருந்த ராமலிங்க ராஜு, அவரது சகோதரரும், நிர் வாக அதிகாரியுமான ராமராஜு, மற்றொரு சகோதரர் சூர்யநாராயண ராஜு மற்றும் அதிகாரிகள், ஆடிட்டர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.