சொத்துக்காக தாய் கொலை: மகன், மகள் கைது

சொத்துக்காக தாய் கொலை: மகன், மகள் கைது
Updated on
1 min read

சொத்துக்காக தாயை கொன்று வீட்டுக்குள் புதைத்த மகன், மகளை ஹைதராபாத் போலீஸார் நேற்று கைது செய்தனர்.

ஹைதராபாத் கோஷ் மஹால் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி பாய் (46). கணவரை இழந்த இவருக்கு பாபு (23) என்கிற மகனும், கிரண் மை(21) என்கிற மகளும் உள்ளனர். சொந்த வீட்டில் வசித்து வரும் லட்சுமி பாய், தனக்கு சொந் தமான கடைகளின் வாடகையை வைத்து பிள்ளைகளை வளர்த்து வந்தார். கடந்த 2 ஆண்டு களுக்கு முன்னர் அதே பகுதியை சேர்ந்த ஜலீல் என்பவருடன் ஏற்பட்ட பழக்கத்தால், லட்சுமி பாய் அவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

இதனால், லட்சுமி பாய் தனது சொத்துகளை ஜலீல் பெயருக்கு மாற்றி விடுவார் என பாபுவும், கிரண் மையும் பயந்தனர். தங்களது பெய ருக்கு சொத்துகளை எழுதி வைக்க வேண்டுமென வலியுறுத்தினர். இதற்கு தாய் லட்சுமி பாய் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் கடந்த ஆண்டு ஜனவரி 20-ம் தேதி லட்சுமி பாயை வீட்டில் வைத்து அடித்து கொன்றனர். பின்னர் வீட்டுக்குள் சடலத்தை புதைத்து விட்டனர். அந்த இடத்தை சிமெண்டால் பூசி விட்டனர்.

லட்சுமி பாய் மும்பையில் உள்ள உறவினர்கள் வீட்டுக்கு சென்றதாக கூறினர். கடந்த சில நாட்களாக சந்தேகம் அடைந்த ஜலீல், இது குறித்து நேற்று ஹைதராபாத் நகர போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் பாபு, கிரண் மை இருவரையும் அழைத்து விசாரித்தனர். அப்போது தாயை கொன்று வீட்டிலேயே புதைத்ததை ஒப்புக்கொண்டனர்.

பாபு, கிரண் மை ஆகிய இரு வரையும் போலீஸார் கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in