Published : 05 Mar 2015 08:53 AM
Last Updated : 05 Mar 2015 08:53 AM

எம்.பி.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை மாதிரி கிராம திட்டத்துக்குப் பயன்படுத்தலாம்: நாடாளுமன்றத்தில் தகவல்

நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்துக்குக் கிடைக் கும் நிதியைக் கொண்டு சான்ஸத் ஆதரஷ் கிராம யோஜனா (மாதிரி கிராமத் திட்டம்) கீழ் மாதிரி கிராமங் கள் உருவாக்கப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நாடாளுமன்றத் தில் நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக புள்ளியியல் அமைச்சர் வி.கே.சிங் நேற்று மக்கள வையில் எழுத்துப்பூர்வமாக அளித் துள்ள பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:

எம்.பி. தொகுதி மேம்பாட்டுத் திட்டத் துக்குக் கிடைக்கும் நிதியை வைத்து, அதன் விதிமுறைகளுக்கு உட்பட்டு, `மாதிரி கிராம திட்டம்' கீழ், தேவைப்படும் பணிகளை மேற்கொள்ளலாம்.

எம்.பி.தொகுதி மேம்பாட்டுத் திட்டம் என்பது குறிப்பிட்ட தொகுதியில், பொது வளங்களை உருவாக்கு வதற்காக ஏற்படுத்தப்பட்டது. `மாதிரி கிராம திட்ட'த்தின் கீழ், அனைத்து எம்.பி.க்களும் 2016ம் ஆண்டில் மாதிரி கிராமம் ஒன்றை உருவாக்கியிருக்க வேண்டும். அப்படியான மேலும் இரண்டு கிராமங்களை 2019ம் ஆண்டுக்குள் உருவாக்க வேண்டும். இதற்கான நெறிமுறைகளை ஊரக மேம்பாட்டுத் துறை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டு பிப்ரவரி 25ம் தேதி வரை எம்.பி.மேம்பாட்டுத் தொகுதி திட்டத்தின் கீழ் நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு ரூ.2,950.5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 2013-14ம் ஆண்டில் இதன் கீழ் ஒதுக் கப்பட்ட மொத்த தொகையே ரூ.3,937 கோடிதான் என்பதை நினைவுகூர வேண்டும்.

அதேபோல நடப்பு நிதியாண்டில் பிப்ரவரி 25ம் தேதி வரை 37,569 பணி களை எம்.பி.க்கள் பரிந்துரைத்துள்ள னர். அவற்றில் 30,527 பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில், எம்.பி.க்கள் பரிந் துரைத்த 1,66,732 பணிகளில் 1,56,319 பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட் டன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x