

தூய்மை காங்கா திட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள அழைப்பை பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
கங்கை நதியோரம் அமைந்திருக்கும் மாநிலங்களில் முதல்வர்களுடன் தூய்மை கங்கா திட்டத்தை செயல்படுத்துவதாக தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் மேற்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார்.
இக்கூட்டத்தில் கலந்து கொள்வதாக பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், உத்தர்காண்ட் முதல்வர் ஹரீஷ் ரவாத், ஜார்க்கண்ட் முதல்வர் ரகுவர் தாஸ் ஆகியோர் ஒப்புதல் தெரிவித்துள்ளனர். ஆனால், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக இதுவரை ஏதும் தெரிவிக்கவில்லை.
கங்கா பேசின் வாரியம் சார்பாக நடைபெறும் 6-வது கூட்டம் இதுவென்றாலும். இக்கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி முதல்முறையாக தலைமை வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இக்கூட்டத்தில், கங்கை நதியோரம் உள்ள மாநில முதல்வர் 'தூய்மை கங்கா' திட்டத்தை செயல்படுத்துவதற்கான யோசனைகளை, பரிந்துரைகளை கேட்டறிவார் எனத் தெரிகிறது.
கங்கை நதியை சுத்தப்படுத்தும் திட்டத்துக்கு ரூ.4000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.