வெளிநாட்டில் சொத்து வாங்கினால் கிரிமினல் குற்றமாக கருதப்படும்: மத்திய அரசு தடாலடி

வெளிநாட்டில் சொத்து வாங்கினால் கிரிமினல் குற்றமாக கருதப்படும்: மத்திய அரசு தடாலடி
Updated on
1 min read

தற்சமயம் வரி ஏய்ப்பு குற்றம் என்பது சிவில் குற்றமாகவே கருதப்படுகிறது. அதன் கீழ் கைதாகும் நபர்கள் பெரும்பாலும் வருமான வரிச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு, அவர்களுக்கு தண்டனை வழங்கப்படுகிறது.

இனி அவ்வாறு வரி ஏய்ப்பு செய்து வெளிநாட்டில் சொத்து வாங்கினால் அது நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் பதியப்படும்.

அதன் மூலம் அந்தக் குற்றம் கிரிமினல் குற்றமாக மாறும் என்று கூறப்படுகிறது.

மேலும், ஏற்கெனவே ‘பட்டியலிடப் பட்ட குற்றங்கள்' எனும் பட்டியலின் கீழ் 15-வது குற்றமாக வருமான வரிச் சட்டத்தின் கீழ் நடைபெறும் குற்றங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

இதன் காரணமாக, இனி வரி ஏய்ப்பு செய்து வெளிநாட்டில் சொத்து குவிப்பவர்களை சி.பி.ஐ., அமலாக்கத் துறை, சுங்கம், காவல், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் செபி எனப் பல்வேறு விசாரணை அமைப்புகளும் தனித் தனியே வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொள்ளும்.

"எனினும், வரி ஏய்ப்பு செய்து உள்நாட்டில் சொத்து வாங்குவது இப்போதைக்கு வருமான வரிச் சட்டங்களின் கீழ் சிவில் குற்றமாக மட்டுமே கருதப்படும்" என்று நிதித்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in