

ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஏலம் மூலம் அரசுக்கு ரூ. 1.10 லட்சம் கோடி வருமானம் கிடைத்துள்ளது. கடந்த 19 நாள்களாக நடைபெற்ற அலைக்கற்றை ஏலம் நேற்று நிறைவடைந்தது.
இந்த ஏலம் மூலம் அரசுக்கு ரூ. 1,09,874 கோடி வருமானம் கிடைத் ததாக அரசு அதிகாரிகள் தெரி வித்தனர். 4 பான்ட் அலைவரிசைக்கு மொத்தம் 115 சுற்று ஏலம் நடை பெற்றது. உச்சநீதிமன்ற அனுமதிக் குப் பிறகு ஏலம் எடுத்த நிறுவ னங்களின் பெயர்கள் வெளியிடப் படும்.
ஐடியா செல்லுலர் நிறுவனத் தின் 9 வட்டாரங்கள், ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனம், வோடபோன் நிறுவனங்களின் தலா 7 வட்டாரங்கள் மற்றும் ஏர்டெல் நிறுவனத்தின் 6 வட்டாரங்களுக்கும் ஏலம் நடைபெற்றது. இவற்றுக்கான லைசென்ஸ் காலம் 2015-16-ல் முடிகிறது.
ஏலம் விடப்பட்ட அலைக்கற்றை களில் பெரும்பாலானவை 900 மெகா ஹெர்ட்ஸ் மற்றும் 1800 மெகா ஹெர்ட்ஸாகும்.
இது தவிர 2014-ம் ஆண்டு விற்பனையாகாமல் இருந்த 1800 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றை மற்றும் 800 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றைகளுக்கும் ஏலம் நடத்தியது. 22 தொலைத் தொடர்பு வட்டாரங்களில் 17 வட்டாரங்களில் 3-ஜி சேவைக்கான அலைக்கற்றை ஏலம், அதாவது 2,100 மெகா ஹெர்ட்ஸுக்கும் ஏலம் நடத்தப்பட்டது.
ஏல ஆவணத்தின்படி 2100 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றை ஏலம் எடுக்கும் நிறுவனங்கள் அதற்கான தொகையில் 33 சதவீதத்தை செலுத்த வேண்டும். 800 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றைக்கு 25 சதவீத தொகையை ஏலம் எடுத்த 10 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். எஞ்சிய தொகையை 12 ஆண்டுகளில் நிறுவனங் கள் செலுத்த வேண்டும். இதில் 2 ஆண்டுகள் சலுகை ஆண்டு களாகும். ஏலத் தொகையை 10 சம பாகங்களாக பிரித்து செலுத்த வேண்டும்.
ஐடியா, ஏர்டெல், வோடபோன், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஏற்கெனவே பெற்றிருந்த அலைக்கற்றையை தக்க வைத்துக் கொள்வதற்காக இந்த ஏலத்தில் பங்கேற்றன. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ, டாடா டெலி சர் வீசஸ், யுனி நாரின் டெலி விங்க்ஸ், ஏர்செல் ஆகிய நிறுவனங் கள் கூடுதலாக அலைக்கற்றை பெற ஏலத்தில் கலந்து கொண்டன.
இந்த ஏலத்தில் 2100 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றைக்கான குறைந்தபட்ச ஏலத் தொகை ரூ.17,555 கோடியாகும்.
800 மெகா ஹெர்ட்ஸ் மற்றும் 900 மெகா ஹெர்ட்ஸுக்கான விலையை அரசு கூடுதலாக நிர்ண யித்திருந்தது. இப்போது 800 மெகா ஹெர்ட்ஸ் அலைக் கற்றை உபயோகிக்கும் நிறுவனங் கள் இப்போது இரு மடங்கு அதிக விலை கொடுத்துள்ளன.
2010-ம் ஆண்டு 3-ஜி ஏலம் மொத்தம் 34 நாட்கள் நடை பெற்றது. இதன் மூலம் கிடைத்த வருமானம் ரூ. 67,718 கோடி. இத்துடன் சேர்த்து 4 ஜி மற்றும் பிராட்பேண்ட் வயர்லெஸ் அலைக்கற்றை ஏலம் மூலம் ரூ. 1.05,000 கோடி வருமானம் கிடைத்தது. 2014-ம் ஆண்டு 900 மெகா ஹெர்ட்ஸ் மற்றும் 1800 மெகா ஹெர்ட்ஸ் ஏலம் 10 நாள் நடைபெற்றது. இதன் மூலம ரூ. 62,162 கோடி வருமானம் கிடைத்தது.