Last Updated : 12 Mar, 2015 02:44 PM

 

Published : 12 Mar 2015 02:44 PM
Last Updated : 12 Mar 2015 02:44 PM

மீனவர்கள் நலன் காக்க தேசிய ஆணையம் தேவை: கனிமொழி

மீனவர்கள் நலன் காக்க தேசிய ஆணையம் அமைக்க வேண்டும் என ராஜ்யசபாவில் திமுக எம்.பி. கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

மாநிலங்களவையில் பேசிய திமுக எம்.பி. கனிமொழி, "70% மேலான மீனவர்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளனர். அவர்கள் நலனைப் பேணும் வகையில் தேசிய ஆணையம் அமைக்க வேண்டும். அவ்வாறு அமைக்கப்பட்டால் 1.5 கோடி மீனவர்கள் தங்கள் உரிமைகளுக்கு குரல் கொடுக்க ஒரு தளம் உருவாகும்.

இந்தியப் பொருளாதாரத்தில் மீனவர்கள் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. ஆனால், அவர்கள் பொருளாதார நிலையோ வேதனைக்குரியதாகவே இருக்கிறது.

கடந்த 2013-14 காலகட்டத்தில் மீனவர்கள் நலனுக்காக மத்திய அரசு எவ்வித பங்களிப்பும் அளிக்கவில்லை.

எனவே இத்தகைய சூழலில் மீனவர்கள் நலனுக்காக தேசிய அளவிலான ஆணையம் ஒன்றை அமைப்பது மிகவும் அவசியமாகிறது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x