

ஆஸ்திரேலியா ஓப்பன் கலப்பு இரட்டையர் பட்டம் வென்ற டென்னிஸ் விளையாட்டு வீரர்கள் லியான்டர் பயசும், மார்டினா ஹின்ஜிசும் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்தனர்.
அப்போது, ஆஸ்திரேலியா ஓப்பன் கலப்பு இரட்டையர் இறுதி போட்டியில் அவர்கள் பயன்படுத்திய கையெழுத்திட்ட டென்னிஸ் மட்டைகளை பிரதமருக்கு பரிசாக அளித்தனர்.