

பிஹாருக்கு நிதி உதவி கோரி பிரதமர் நரேந்திர மோடியை பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் நேற்று டெல்லியில் சந்தித்துப் பேசினார்.
பாஜக ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி முறிந்த பிறகு மோடியை அவர் இப்போதுதான் முதல்முறையாக சந்திக்கிறார்.
14-வது நிதிக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்து வதன் மூலம் பிஹாருக்கு ரூ.50 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும். எனவே அதனை ஈடு செய்ய வேண்டுமென்று மோடியிடம் நிதிஷ் கோரிக்கை வைத்துள்ளார்.
17 ஆண்டுகளாக நீடித்து வந்த பாஜக ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி கடந்த மக்கள வைத் தேர்தலில் மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போது உடைந்தது. மோடியை பிரதமர் வேட்பாளராக ஏற்க முடியாது என்று கூறி கூட்டணியில் இருந்து நிதிஷ் விலகினார். அப் போது இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த மோடி, நான்கு சுவருக் குள் தன்னிடம் சகஜமாக பேசும் நிதிஷ், அரசியல் ஆதாயத்துக்காக தன்னை எதிர்ப்பதாக கூறி யிருந்தார்.
இதன் பிறகு மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியைப் பிடித்தது. பிஹாரில் ஐக்கிய ஜனதா தளம் தோல்விக்கு பொறுப்பேற்று நிதிஷ் குமார் முதல்வர் பதவியில் இருந்து விலகினார். இப்போது அங்கு ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் அவர் மீண்டும் முதல்வராகியுள்ளார்.
இந்நிலையில் நேற்று டெல்லி வந்த நிதிஷ் குமார், மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது நிதிக்குழு பரிந்துரைகளை அமல் படுத்துவதால் பிஹாருக்கு ஏற்படும் இழப்புகளை எடுத்துக் கூறி மாநிலத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்குமாறு மோடியிடம் கேட்டுக் கொண்டார். பிறகு செய்தியாளர் களிடம் பேசிய நிதிஷ், நிதிக் குழுவால் இப்போது பிஹாருக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அதை ஈடு செய்யுமாறு கேட்டுக் கொண்டேன் என்றார்.
இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று பிரதமர் அலுவல கம் தெரிவித்துள்ளது. முன்னதாக பிஹாரில் நிதிஷ் நடத்திய அனைத் துக் கட்சி கூட்டத்தை பாஜக புறக்கணித்தது. பிஹாருக்கு நிதி உதவி கேட்டு நேரடியாக பிரதமரிடம் கடிதம் எழுத இருப்ப தாக பிஹார் மாநில பாஜகவினர் தெரிவித்தனர்.