

தெலங்கானா மாநிலத்தில் உள்ள 46 ஆயிரம் ஏரிகளை தூர்வாரும் திட்டத்தை ’மிஷன் காகதீயா’ எனும் பெயரில் முதல்வர் சந்திர சேகர ராவ் நேற்று தொடங்கி வைத்தார்.
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம், சதாசிவ நகரில் நேற்று முதல்வர் சந்திரசேகர ராவ் இத்திட் டத்தை தொடங்கி வைத்து பேசிய தாவது:
காகதீய மன்னர்கள் அவர்களது காலத்தில் தெலங்கானா பகுதியில் ஆயிரக்கணக்கான ஏரிகளை உருவாக் கினர். இதனால் தெலங்கானா முழு வதும் வறட்சி இன்றி பசுமையாக இருந்தது. ஆனால் இந்திய சுதந்திரம் பெற்ற பின்னர் ஏரிகள் சரிவர பராமரிக்கப்படாததால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து போனது.
குடிநீர் பிரச்சினையை நிரந்தரமாகப் போக்க மாநிலம் முழுவதும் உள்ள 46 ஆயிரம் ஏரிகளை தூர்வார திட்ட மிடப்பட்டுள்ளது. இதற்காக ‘மிஷன் காகதீயா’ எனும் பெயரில் இப்பணிகள் தொடங்கி உள்ளன.
இதில் மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் அனைவரும் இரவு, பகலாக பாடுபட்டு ஓராண்டுக்குள் அனைத்து ஏரிகளிலும் நீர் நிரம்ப பாடுபட வேண்டும். இதனை ஒரு யாக மாக நினைத்துச் செயல்பட வேண்டும். ஏரிக்கரை ஓரத்தில் பனை மரங்கள் நட வேண்டும். தெலங்கானா மாநில போராட்டத்துக்கு பாடுபட்டதை போன்று இதற்காக நாம் அனைவரும் பாடுபட வேண்டும். இவ்வாறு முதல்வர் சந்திர சேகர ராவ் கூறினார். இத்திட்டத்துக்காக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் பலர் நேற்று நன்கொடையும் வழங்கினர்.