

பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட நிர்பயா குறித்து, தயாரிக்கப்பட்ட `இந்தியாவின் மகள்’ ஆவணப்படத்தை இந்தியா வில் வெளியிட தடை செய்யப் பட்டுள்ளது.
இந்த ஆவணப்படத்தை, அமில வீச்சுகளுக்கு எதிராக செயல்பட்டு வரும் `ஸ்டாப் ஆசிட் அட்டாக்ஸ்’ எனும் பொதுநல அமைப்பு, தடைக்கு முன்பாக இணையத்தி லிருந்து தரவிறக்கம் செய்துள்ளது. பின்னர், உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டம் ரப் தனு எனும் கிராமத்தில், நேற்று முன்தினம் பொது இடத்தில் இப்படத்தை அந்த அமைப்பு திரையிட்டுள்ளது. சுமார் 100 பேர் அந்தப்படத்தைப் பார்த்துள்ளனர்.
இதுதொடர்பான தகவல் அறிந்த அன்வல் கேடா காவல்துறையினர் அந்த அமைப்பின் நிர்வாகி கேத்தன் தீக் ஷித்தை அழைத்து விசாரணை செய்தனர். அப்போது, மேலும் ஒரு கல்லூரி அரங்கு மற்றும் சுற்றுப் பகுதி கிராமங்களிலும் திரையிட இருப்பதாக கேத்தன் தெரிவித் துள்ளார்.
இந்நிலையில், தடையை மீறி இந்த ஆவணப்படம் திரையிடப் பட்டது குறித்து விசாரணை செய்ய ஆக்ரா மாவட்ட நிர்வாகம் ஒரு குழுவை அமைத்துள்ளது.
இது குறித்து `தி இந்து’விடம் `ஸ்டாப் ஆசிட் அட்டாக்ஸ்’ அமைப் பின் தேசிய நிர்வாகி சேத்தன் குப்தா கூறும்போது, “இந்த ஆவணப் படத்தை திரையிட்ட கேத்தனுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம். அப்படத் துக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்க்கும் வகையில் திரையிட்ட மைக்காக, வழங்கப்படும் எந்த தண்டனையையும் ஏற்க கேத்தன் தயாராக இருக்கிறார்” என்றார்.