

நாட்டிலேயே முதல்முறையாக கர்நாடகத்தில் சாதிவாரி கணக் கெடுக்கும் பணி வரும் ஏப்ரல் 11-ம் தேதி தொடங்குகிறது. இதற்கு, தேவகவுடாவின் மதச் சார்பற்ற ஜனதா தளம் மற்றும் ஸ்ரீராம் சேனா உள்ளிட்ட இந்து அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. சாதி வாரி கணக்கெடுப்புக்கு தடைவிதிக்கக் கோரி நீதிமன்றத்தை அணுகவும் ஒரு சிலர் முடிவு செய்துள்ளனர்.
கர்நாடக எதிர்க்கட்சி தலை வரும், முன்னாள் முதல்வருமான ஜெகதீஷ் ஷெட்டர், ‘‘சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் சாதி உட்பிரிவுகளுக்குள் சண்டை ஏற்படுத்தவே கர்நாடக அரசு இந்த திட்டத்தை மேற்கொள்கிறது. இந்த கணக்கெடுப்பில் கிறிஸ்தவர், இஸ்லாமியர் இடையே காணப் படும் சாதிகளை தனியாக பிரித்து கணக்கெடுக்காமல், ஒட்டுமொத்த மாக கிறிஸ்தவர், இஸ்லாமியர் என்றே குறிப்பிட வேண்டும்'' எனத் தெரிவித்துள்ளார்..
எதிர்ப்புகளை மீறி சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த கர்நாடக சமூக நலத்துறை அமைச்சர் ஹெச்.ஆஞ்சநேயா முடிவு செய்துள்ளார். அதற்கான இறுதிக்கட்டப்பணி களில் அவர் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அவர் ‘தி இந்து’ விடம் கூறியதாவது: 1931-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் முதல்முறையாக சாதிவாரி கணக் கெடுப்பு நடத்தப்பட்டது. கடந்த 80 ஆண்டுகளில் அனைத்து தரப்பு மக்களின் வாழ்வில் ஏற்பட்டுள்ள சாதகங்கள், பாதகங் கள் ஆகியவற்றை அறிய வேண் ஒடியது பொறுப்புள்ள அரசாங் கத்தின் கடமை. சாதி வாரி கணக்கெடுப்பு தலித், பழங்குடி யினர், சிறுபான்மையினருக்கு மட்டுமில்லாமல் பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ள இந்துக் களுக்கும் உதவிகரமாக இருக்கும்.
அடிப்படை வசதிகள் கிடைக் காமல் அவதிப்படும் அனைத்து தரப்பின ருக்கும் ஏற்ற சட்ட திட்டங் களை வகுக்கவே சாதிவாரி கணக் கெடுப்பு நடத்தப்படுகிறது.
வரும் ஏப்ரல் 11-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது. கர்நாடகத்தில் 6.21 கோடி மக்கள் வசிக்கின்றனர்.
இதில் 1427 சாதியினர் இருப்பதாக கண்டறியப்பட் டுள்ளது. சாதிவாரி கணக் கெடுப்பு பணிகளுக்காக முதல் கட்டமாக ரூ.117 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.