

உலகத்திலேயே மிகப் பெரிய அரசியல் கட்சி பாஜகதான். இந்தக் கட்சிக்கு மொத்தம் 8.8 கோடி தொண்டர்கள் உள்ளனர். சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி 2-வது இடத்தில் உள்ளது.
கடந்த மக்களவைத் தேர்தலில், பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை அறிவித்ததில் இருந்து பாஜக வேகமாக வளரத் தொடங்கியது. கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை இந்தக் கட்சியில் 8.8 கோடி பேர் உறுப்பினர்களாகப் பதிவு செய்துள்ளனர். உலகத்திலேயே அதிக உறுப்பினர்கள் கொண்ட அரசியல் கட்சி என்ற அந்தஸ்து பாஜகவுக்குக் கிடைத்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று அறிவிப்பார் என்று எதிர்பார்க் கப்படுகிறது. கடந்த 8 நாட்க ளில் மட்டும் ஒரு கோடி பேர் பாஜகவில் சேர்ந்துள்ளனர்.
இதுகுறித்து பாஜக துணைத் தலைவர் தினேஷ் சர்மா கூறும்போது, ‘‘உலகிலேயே மக்கள் தொகை அதிகம் உள்ள சீனாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 8.6 கோடி உறுப்பினர்கள்தான் உள்ளனர். ஆனால், பாஜகவுக்கு 8.8 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். பாஜகவில் உறுப்பினர்களைச் சேர்க்க, ‘டயல் எ மெம்பர்ஷிப்’ திட்டம் கடந்த 4 மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. அப்போது பாஜகவில் 10 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் உறுப்பினர்கள் பதிவை புதுப்பித்து இத்திட்டத் தைத் தொடங்கி வைத்தார். தொலைபேசி மூலம் பாஜகவில் உறுப்பினராகும் இத்திட்டம் இன்றுடன் நிறைவடைகிறது.