

கருப்பு பண விவகாரத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்காத மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை மீ்ட்டுக் கொண்டுவர வேண்டும் என்று மூத்த வழக்கறி ஞர் ராம் ஜெத்மலானி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் திருந்தார்.
கருப்பு பணத்தை மீட்பது தொடர்பாக, முன்னாள் நீதிபதி ஜீவன் ரெட்டி தலைமையில் 13 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் தத்து, ரஞ்சனா பிரகாஷ் தேசாய், மதன் லோக்கூர் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறப்பு புலனாய் வுக் குழு அமைக்க உத்தரவிட்டு 3 ஆண்டுகள் ஆகியும், குழுவை அமைக்காத மத்திய அரசுக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரி வித்தனர்.
ஜெர்மனி வங்கியில் முதலீடு செய்துள்ள இந்தியர்களின் பட்டி யலை அந்நாடு வழங்கிய பிறகும், அதை மத்திய அரசு மனுதாரருக்கு வழங்காததற்கும் நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இது, நீதிமன்ற அவமதிப்புக்குச் சமம் என்று கருத்து தெரிவித்தனர்.
மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரன், “சிறப்பு புலனாய்வுக் குழு தலைவர் பொறுப்பை ஏற்க உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜீவன் ரெட்டி மறுத்துவிட்டார். அடுத்து பரிந்துரைக்கப்பட்ட முன்னாள் நீதிபதி எம்.பி.ஷா-வும் பொறுப்பேற்கத் தயங்குகிறார். அதனால் குழுவை அமைக்க முடிய வில்லை.
கருப்பு பணம் குறித்து ஜெர்மனி வங்கி அளித்துள்ள தகவல்களை வெளியிட, வெளி நாட்டு ஒப்பந்தங்கள் தடையாக உள்ளன” என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், “கருப்பு பண விவகாரம் குறித்து மத்திய நிதித்துறை செயலர் அடுத்த வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும். சிறப்பு புலனாய்வுக் குழு தலைமை பொறுப்புக்கு நியமிக்க இரண்டு நீதிபதிகள் பெயரை மனுதாரர் தரப்பிலும் மத்திய அரசு தரப்பிலும் பரிந் துரை செய்ய வேண்டும்” என் றனர். இதையடுத்து வழக்கு விசாரணையை அடுத்த வாரத் துக்கு தள்ளிவைத்தனர்.