

ரயில் டிக்கெட்டை 120 நாட்களுக்கு முன்னதாக பதிவு செய்யும் முறை நாளை (ஏப்ரல் 1-ம் தேதி) முதல் அமலுக்கு வருகிறது.
இது தொடர்பான ரயில்வே நிர்வாக அறிவிப்பில், "மத்திய ரயில்வே அமைச்சகம் ரயில் டிக்கெட் முன்பதிவு காலத்தை 60 நாளிலிருந்து 120 நாட்களாக அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இது நாளை முதல் (ஏப்ரல் 1, 2015) அமலுக்கு வருகிறது.
இருப்பினும், பயண நாள் இந்த 120 நாட்களில் பொருந்தாது.
தாஜ் எக்ஸ்பிரஸ், கோமதி எக்ஸ்பிரஸ், சிறப்பு ரயில்கள் போன்ற ஒரு சில ரயில்களின் முன்பதிவில் எந்த மாற்றமும் இருக்காது.
இந்த ரயில்களுக்கு ஏற்கனவே உள்ள குறுகிய கால முன்பதிவு நேரமே பொருந்தும். சர்வதேச சுற்றுலா பயணிகளின் முன்பதிவு காலமான 360 நாட்கள் பதிவு காலத்தில் எந்த மாற்றமும் இல்லை" என தெரிவிக்கப்பட்டுள்ளது.