

உணவு, உரம், பெட்ரோலியப் பொருட்கள் உள்ளிட்டவற்றுக்கு கொடுக்கப்பட்டு வந்த மானியங்கள் பட்ஜெட்டில் ரூ.2.27 லட்சம் கோடியாக அதாவது 10 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது.
பெட்ரோலியப் பொருட்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியம் கணிசமாக குறைந்துள்ளதே இதற்கு முக்கியக் காரணம். இந்த பட்ஜெட்டில் மானியம் ரூ.2 லட்சத்து 27 ஆயிரத்து 387 கோடியாக உள்ளது. கடந்த பட்ஜெட்டில் இது ரூ.2 லட்சத்து 53 ஆயிரத்து 913 கோடியாக (மறு மதிப்பீடு) இருந்தது.
இதில் உணவுப் பொருட்களுக்கான மானியம் ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்து 419 கோடி. உரங்களுக்கான மானியம் 72 ஆயிரத்து 968 கோடி. பெட்ரோலிய பொருட்களுக்கான மானியம் ரூ.30 ஆயிரம் கோடியாகும். கடந்த நிதியாண்டில் இது 60 ஆயிரத்து 270 கோடியாக மதிப்பிடப்பட்டது.