

தடை செய்யப்பட்ட ‘சிமி’ (இந் திய இஸ்லாமிய மாணவர் இயக் கம்) அமைப்பு தனது பயங்க ரவாத செயல்களுக்கு நிதி திரட்டுவதற்காக புதிய வடிவத் தில் மீண்டும் உருவாகும் வாய்ப் புள்ளதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தானைச் சேர்ந்த வெடி குண்டு நிபுணர் வாகாஸ் உள்ளிட்ட இந்திய முஜாஹிதீனின் முக்கிய நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலை யில், இந்த சந்தேகம் டெல்லி காவல் துறைக்கும் புலனாய்வு அமைப்புகளுக்கும் ஏற்பட்டுள் ளது. ஆஜ்மீரில் மார்ச் மாதம் கைது செய்யப்ட்டார் வாகாஸ். ‘சிமி’ அமைப்பானது வேறு வடிவில் பரிணமிக்க திட்டமிட்டுள் ளதாகவும் டெல்லி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு நகரங்களில் அந்த அமைப்பு முகாமிட்டு செயல் படக்கூடும் என்றும் விசாரணை யில் வாகாஸ் தெரிவித்துள்ளார். இந்த தகவலை போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
டெல்லி காவல் துறையில் காவலில் வைக்கப்பட்டுள்ள வாகாஸ், ‘சிமி’ இயக்கத்தின் தீவிர உறுப்பினர்கள் பற்றிய விவரங்களையும் தெரிவித்திருக் கிறார். ‘சிமி’யின் முக்கிய உறுப்பினரான டாக்டர் எனப்படும் அபு பைசலுடன் வாகாஸுக்கு தொடர்பு இருப்பது போலீஸா ருக்கு தெரியவந்துள்ளது. வங்கிகளில் கொள்ளையடிப்பதற் காக ‘மால் இ கானிமட்’ என்ற தனி பிரிவில் முஸ்லிம் இளைஞர்களை சேர்க்க அபு பைசல் தூண்டு தலாக செயல்படுபவர் என கூறப்படுகிறது.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள கண்ட்வா சிறையிலிருந்து பைசல் உள்ளிட்ட 5 ‘சிமி’ உறுப்பினர்கள் 2013-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி தப்பிய பிறகு கடந்த ஆண்டு டிசம்பரில் பைசல் கைது செய்யப்பட்டார்.