

வரும் ஏப்ரல் 10ம் தேதி முதல் 16ம் தேதி வரை பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் கனடா ஆகிய மூன்று நாடுகளில் தான் மேற்கொள்ளும் சுற்றுப்பயணம், இந்தியாவில் வேலைவாய்ப்புகளை உருவாக் குவதை மையம் கொண்டிருக்கும் என்று பிரதமர் மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் மேலும் கூறியிருப்பதாவது:
எனது மூன்று நாடுகள் சுற்றுப் பயணம் இந்தியாவில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதை இலக்காகக் கொண்டிருக்கும்.
இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே பொருளாதார கூட்டு றவை பலப்படுத்த விவாதங்கள் மேற்கொள்ள உள்ளேன். பின்னர் பாரிஸ் நகரத்துக்கு வெளியே இருக்கும் சில தொழிற்சாலை களைப் பார்வையிடுகிறேன்.
'இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்துக்கு அவர்களை ஈர்க்க முயற்சிப்பேன். அடல் பிஹாரி வாஜ்பாயி பிரதமராக இருந்த போது அவர் சுற்றுப் பயணம் மேற்கொண்ட முதல் நாடு பிரான்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெர்மனியில் அதன் தலைவர் மெர்கல் உடன், ஹேன்னோவர் மெஸ் எனும் தொழிற்காட்சியைத் தொடங்கி வைக்கிறேன். அதில் இந்தியாவும் ஒரு பங்குதாரர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய நாடுகளில் இந்தியாவின் ஏற்றுமதி வாய்ப்பு களை விரிவுபடுத்த ஜெர்மனியிடம் ஆதரவை நாட உள்ளேன். அதே போல அங்கிருந்து இந்தியாவுக்கு அதிகளவு முதலீடுகளை ஈர்க்கவும் திட்டமிட்டுள்ளேன்.
கனடாவில் அங்குள்ள அரசியல் தலைவர்கள், தொழில திபர்கள் மற்றும் இந்திய வம்சா வளியினரைச் சந்திக்கிறேன். கனடாவுடன் அணுசக்தி தொடர் பான உறவை மீண்டும் கட்டமைக்க முயற்சிகள் மேற்கொள்ள இருக்கி றேன். நம்முடைய நாட்டில் எந்தத் துறைகளுக்கெல்லாம் முன்னுரிமை வழங்கப்படு கிறதோ, அதில் எல்லாவற்றிலும் கனடாவின் பங்களிப்பு நிச்சயமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.