

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சர்வதேச எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கதுவா மற்றும் சம்பா மாவட்டங்களில் நேற்று தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றனர். அதனை எல்லைப் பாதுகாப்புப் படையினர் முறியடித்து தீவிரவாதிகளைப் பின்வாங்கச் செய்துள்ளனர்.
இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும் போது, "புதன்கிழமை அதிகாலை யில் கதுவா மற்றும் சம்பா மாவட்ட எல்லைப் பகுதிகளில் தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சி செய்தனர்.
சந்தேகத்துக்கு இடமான அந்த ஆட்கள் நடமாட்டத்தைக் கண்டு சுதாரித்துக் கொண்டு எல்லைப் பாதுகாப்புப் படையினர் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனால் ஊடுருவல்காரர்கள் பின்வாங்கினர்" என்றார்.
கடந்த வாரத்தில் கதுவா மாவட்டத்தில் ஒரு காவல் நிலையம் மீதும் சம்பா மாவட்டத் தில் ராணுவ முகாம் மீதும் தீவிர வாதிகள் திடீர் தாக்குதல் நடத் தினர். ராணுவ வீரர்கள் பதிலடி கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து அப்பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.