

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை போலீஸார் உளவு பார்த்ததாக எழுந்த சர்ச்சை தொடர்பாக டெல்லி போலீஸ் கமிஷனர் பி.எஸ்.பாஸ்ஸி உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜ்ஜுவிடம் விளக்கமளித்தார்.
கிரண் ரிஜ்ஜு, இவ்விவகாரம் தொடர்பாக இன்று நாடாளுமன்றத்தில் விளக்கமளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 12-ம் தேதி, டெல்லியில் உள்ள ராகுல் காந்தி அலுவலகத்துக்கு போலீஸார் சென்று விசாரித்து வந்துள்ளனர். இதற்கு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.