

கடற்கரையோரத்தில் உள்ள அரசு சொத்துகளை பாதுகாப்பதற்காக இந்திய கடற்படையில் புதிதாக 3 ரோந்து கப்பல்கள் நேற்று சேர்க்கப்பட்டன. விசாகப்பட்டினத் தில் உள்ள கடற்படை துறையில் நேற்று நடைபெற்ற விழாவில் கடற்படை உயர் அதிகாரி (கிழக்கு) சதீஷ் சோனி இந்த கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
கடற்படையின் கிழக்கு பிராந்தியத்தில் ரோந்துப் பணி களுக்காக 6 கப்பல்களை ஈடு படுத்த திட்டமிடப்பட்டது. ஏற் கெனவே 3 கப்பல்கள் சேர்க்கப் பட்ட நிலையில், நேற்று ஐஎன் ஐஎஸ்வி டி 38, ஐஎன் ஐஎஸ்வி டி 39, ஐஎன் ஐஎஸ்வி டி40 ஆகிய 3 ரோந்து கப்பல்கள் சேர்க்கப் பட்டன. கப்பல் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ள ஓஎன்ஜிசி, இந்திய கடற்படை ஆகியவை கூட்டாக இணைந்து இந்த திட்டத்தை நிறைவேற்றியுள்ளன.
இதுகுறித்து வைஸ் அட்மிரல் சதீஷ் சோனி கூறும்போது, “விசாகப்பட்டினத்தில் நிலை கொண்டிருக்கும் இந்த கப்பல்கள், காகிநாடா கடற்கரையையொட்டி அமைந்திருக்கும் அரசு சொத்து களை பாதுகாப்பதற்காக, ஒரு சமயத்தில் இரண்டு என்ற அடிப்படையில் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்படும்.
நாட்டின் சொத்துகளை பாது காக்கும் விஷயத்தில் ஓஎன்ஜிசி யுடன் கைகோத்து செயல்படுவதில் பெருமை கொள்கிறோம். இந்த 6 கப்பல்களையும் முறையாக பராமரிக்க ஓஎன்ஜிசி தொடர்ந்து ஆதரவு தர வேண்டும்” என்றார்.
புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 3 கப்பல்களும் கடலோரத்தில் அமைந்துள்ள நாட்டின் சொத்து களை பல்வேறு அச்சுறுத்தல் களிலிருந்து பாதுகாக்கும் என்று ஆந்திர மாநிலத்துக்கு பொறுப்பு வகிக்கும் கடற்படை அதிகாரி கே.ஏ.போபண்ணா தெரிவித்தார்.
இந்த கப்பல்கள் அபுதாபி ஷிப் பில்டர்ஸ் மற்றும் ஸ்பெயின் நாட்டின் ராட்மேன் ஆகிய நிறுவனங்களால் வடிவமைக் கப்பட்டு கட்டப்பட்டவை. குறைந்த அளவு ஆயுத வசதி கொண்ட இவை ஆழ்கடல் பகுதியிலும் கரையோரங்களிலும் வேகமாக செல்லக்கூடியவை. இரவு, பகல் எப்போதும் கண்காணிப்பில் ஈடுபடும் இவை அதிநவீன தகவல் தொடர்பு, கண்காணிப்பு வசதி கொண்டவை.