Published : 01 Mar 2015 01:39 PM
Last Updated : 01 Mar 2015 01:40 PM
நாடாளுமன்ற மக்களவையில் நேற்று பட்ஜெட்டை தாக்கல் செய்து ஜேட்லி பேசியதாவது:
இந்தியாவில் தொழில் தொடங்க, வெளிநாட்டினர் ஆண்டுக்கணக்கில் காத்திருக்கின்றனர். பல துறை களிடம் அனுமதி பெறுவதில் பல கெடுபிடிகள் உள்ளன. பல விதி முறைகள் உள்ளன. இதுபோன்ற பிரச்சினைகள் இல்லாமல், வெளிநாட்டினர் இந்தியாவில் முதலீடு செய்வதற்கும், வர்த்தகம் செய்வதற்கும் ஏற்ற சூழ்நிலையை உருவாக்கித் தர வேண்டும். அதற்கேற்ப ஒரு சட்ட மசோதாவை உருவாக்க நிபுணர் குழு ஒன்றை அமைக்க வேண்டும்.
சமீபத்தில் ‘இ-பிஸ்’ என்ற இணையதள சேவை அறிமுகம் செய்யப்பட்டது. இந்த இணைய தளத்தில் 14 அரசுத் துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் சம்பந்தப்பட்டவர்கள் ஒரே இடத்தில் அனுமதி பெற வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் மற்ற மாநிலங்களும் இணையும் என்று எதிர்பார்க் கிறோம்.
நாட்டில் வேலைவாய்ப்புகளை நாம் அதிகரிக்க வேண்டும் என்று உண்மையாக நினைத்தால், முதலீடு செய்வதற்கு ஏற்ற நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும். அதற்கு இந்தியாவில் தொழில் தொடங்க அனுமதி பெறுவதில் வெளிப்படையான விதிமுறைகள் இருக்க வேண்டும்.
முதலீடு, வர்த்தகம் தொடர்பாக உலகின் 182 நாடுகளின் பட்டியலில் இந்தியா 142வது இடத்தில் உள்ளதாக சமீபத்தில் உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நேரடி அந்நிய முதலீடு இந்தியாவில் மிக குறைவாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.
எனவே, உலக வங்கி பட்டிய லில் முதல் 50-க்குள் இந்தியாவைக் கொண்டு வர தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். முதலீட் டாளர்களின் விண்ணப்பங்களை குறிப்பிட்ட காலத்துக்குள் பரிசீலித்து முடிவெடுத்தல், ஒரே ஒரு முறை பதிவு செய்யும் முறை போன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது. இவ்வாறு அருண் ஜேட்லி கூறினார்.