

தி இந்து(ஆங்கிலம்)வில் வெளியான ஒரு புகைப்படம்தான் இரு தேசிய விருதுகளைப் பெற்றுத் தந்துள்ள திரைப்படத்தை இயக்க காரணமாயிருந்தது என மலையாள மொழி திரைப்பட இயக்குநர் ஜெயராஜ் கூறியுள்ளார்.
ஒரு புகைப்படம் என்பது ஆயிரம் வார்த்தைகளுக்கு நிகரானது என்பதை நாம் அறிவோம். ஒரு புகைப்படம் சிலநேரங்களில், இதைப்போல ஒரு தேசிய விருது பெற்ற திரைப்படத்திற்கும் உந்துதலாயிருந்துள்ளது என்பது வியப்பான ஒன்றல்லவா?
இந்த புகைப்படம், குவாஹாத்தியை மையமாகக் கொண்ட தி இந்துவின் சிறப்பு செய்திக்கான புகைப்படக் கலைஞர் ரிது ராஜ் கன்வார் என்பவர், செவ்வாய் அன்று இரு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட ஓட்டால் மலையாளத் திரைப்படத்திற்கு உந்துதலாயிருந்திருக்கிறார்.
இப்படத்தின் இயக்குநர் ஜெயராஜ் சிறந்த சுற்றுச்சூழல் திரைப்படம் மற்றும் சிறந்த தழுவல் திரைக்கதை ஆகிய இரு விருதுகளை வென்றெடுத்துள்ளார்.
இதுகுறித்து ஜெயராஜ் கூறியதாவது, ''இந்த புகைப்படம் என் மீது மிகவும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. அது என்னை அலைக்கழித்தது. என்னுடைய திரைப்படத்தில் இதை முக்கியமான காட்சியாக இடம்பெற செய்யவேண்டுமென்று விருப்பமும் மேலோங்கியது. மேலும் இந்த அழகான படத்தை ஆன்டன் செகாவின் வான்கா சிறுகதையோடு என்னால் பொருத்திப்பார்க்கவும் முடிந்தது. நீண்ட நாட்களாகவே எனது ஒரு படத்திற்காக இப்படத்தின் காட்சியைத் தழுவி காட்சியமைக்க வேண்டுமென்று விரும்பினேன்.
நான் ஓட்டால் திரைப்படத்தை எடுக்க அதற்கான உந்துதலாக தி இந்துவில் வெளியான இப்படமே காரணமாக இருந்தது. அஸாம் மாநிலத்தில் மோரிகான் மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட வெள்ள பாதிப்பின்போது இப்படத்தை கன்வார் க்ளிக் செய்துள்ளார். படத்தில் உள்ள சிறுவன் இருக்கும் இடத்தினை மட்டும் கண்டுபிடிக்க முடிந்தால் அவருக்கு ஏதாவது ஒருவழியில் நான் உதவுமுடியும் என்று ஜெயராஜ் கூறினார்.