ஜாட் இடஒதுக்கீடு பிரச்சினைக்கு தீர்வு: பிரதமர் நரேந்திர மோடி உறுதி

ஜாட் இடஒதுக்கீடு பிரச்சினைக்கு தீர்வு: பிரதமர் நரேந்திர மோடி உறுதி
Updated on
1 min read

ஜாட் இடஒதுக்கீடு பிரச்சினைக்கு சட்ட வரம்புக்கு உட்பட்டு தீர்வு காணப்படும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.

வடஇந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஜாட் சமூகத்தினர் பெரும்பான்மையாக வசிக்கின் றனர். கடந்த காங்கிரஸ் அரசு 2014 மார்ச் 4-ம் தேதி ஜாட் சமுதாயத்தை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி) பட்டியலில் இணைக்க உத்தரவு பிறப்பித்தது.

இதை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடரப் பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தருண் கோகோய், நாரிமன் அடங்கிய அமர்வு, ஜாட் சமூகத்தை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் சேர்த்தது செல்லாது என்று கடந்த 17-ம் தேதி தீர்ப்பளித்தது.

இந்த உத்தரவைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஜாட் சமுதாய தலைவர்கள் 70 பேர் அடங்கிய குழு, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசியது.

தங்கள் சமூகத்தை ஓபிசி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று பிரதமரிடம் ஜாட் சமுதாய தலைவர்கள் வலியுறுத்தினர்.

அவர்களின் கோரிக்கையை கவனமாகக் கேட்டறிந்த பிரதமர், இடஒதுக்கீடு பிரச்சினை தொடர்பாக சட்டவரம்புக்கு உட்பட்டு தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in