

ஹரியாணா மாநிலம், ஹிசார் அருகேயுள்ள கைம்ரி கிராமத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த தேவாலயத்தின் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது.
இது தொடர்பாக முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் அனில் கோடரா என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதனை, ஹிசார் காவல்துறை கண்காணிப்பாளர் சவுரப் சிங் உறுதி செய்துள்ளார்.
முன்னதாக, முதல்வர் மனோகர் லால் கட்டார் கூறும்போது, “பாதிரி யார் சுபாஷ் சந்திர் வாக்குமூலத் தின்படி அனில் கோடாரா, தல்பிர் சிங், ராஜ்குமார், குல்தீப், சத்பால், கிருஷன், சுரேஷ், தினேஷ், ஜோகிந்தர், குல்வந்த், சுதிர், விஜேந்தர், சத்நரேன், சோட்டு ராம் உள்ளிட்டோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட் டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக அவர் சட்டப் பேரவையில் நேற்று முன்தினம் கூறும்போது, “தேவாலயக் கட்டிடம், விதிமுறை மீறி கட்டப் பட்டு வருகிறது. பாதிரியாருக்கும், தேவாலயத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாய்ச்சண்டை முற்றி அந்த இடம் சூறையாடப்பட் டுள்ளது” என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.