கல்லூரி, பல்கலைக்கழகங்களில் தொழில்சார்ந்த கல்வித் திட்டத்தை பல்கலை. மானியக் குழு அமல்படுத்துகிறது: மக்களவையில் ஸ்மிருதி இரானி பதில்

கல்லூரி, பல்கலைக்கழகங்களில் தொழில்சார்ந்த கல்வித் திட்டத்தை பல்கலை. மானியக் குழு அமல்படுத்துகிறது: மக்களவையில் ஸ்மிருதி இரானி பதில்
Updated on
1 min read

பல்வேறு புதிய திட்டங்களின் கீழ் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் திறன் சார்ந்த, தொழில் சார்ந்த படிப்புகளை பல்கலைக்கழக மானியக் குழு அமல்படுத்தி வருகிறது என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.

மக்களவையில் நேற்று உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியதாவது:

கல்லூரி, பல்கலைக்கழகங்களில் திறன் அடிப்படையில், தொழில் சார்ந்த படிப்புகளைப் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அமல் படுத்தி உள்ளது. இந்த படிப்புகளை ஊக்கப் படுத்தி வருகிறது. ‘தொழில் சார்ந்த படிப்புகள் அறிமுகம்’ (சிஓசி) என்ற பெயரில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தப் படிப்பு களுக்கு தகுதி உள்ள கல்லூரிகள், பல்கலைக் கழகங்களுக்கு யுஜிசி நிதியுதவியும் அளிக்கிறது. சான்றிதழ், டிப்ளமோ, அட்வான்ஸ் டிப்ளமோ நிலையில் இந்தப் படிப்புகள் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன.

தொழில்முறை சார்ந்த படிப்புகளுக்கு ஊக்கம் அளிக்க வழிகாட்டு முறைகளையும் யுஜிசி மாற்றி அமைத்துள்ளது. மேலும், ‘கம்யூ னிட்டி காலேஜ்’, ‘பி.வொக் டிகிரி புராகிராம்’ ஆகிய 2 திட்டங்களின் கீழ் கல்லூரிகள், பல் கலைக்கழகங்களுக்கு யுஜிசி நிதியுதவி செய்கிறது. இதன்மூலம் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் தொழில் கல்விகள் கற்றுத் தரப்படுகின்றன. பல்வேறு தொழிற்துறை யினரும் பாடத் திட்ட வடிவமைப்பில் பங்கேற்றுள்ளனர்.

மேலும், ‘பண்டிட் தீனதயாள் உபாத்யாய் கவுசல் கேந்த்ரா’ என்ற பெயரில் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் மையங்கள் அமைக்க யுஜிசி ஒப்புதல் வழங்கி உள்ளது. நாடுமுழுவதும் உள்ள கல்லூரி, பல்கலைக்கழகங்களில் இது போன்ற 100 மையங்கள் அமைக்க யுஜிசி திட்ட மிட்டுள்ளது. இந்த மையங்களில் திறன் சார்ந்த கல்வி கற்றுத்தரப்படும். சான்றிதழ் கல்வி முதல் முதுநிலை கல்வி வரை இந்த மையங்களில் கற்றுத் தரப்படும். இவ்வாறு அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in