

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த தனது மனைவி சுனிதா வுக்கு அர்விந்த் கேஜ்ரிவால் நன்றி கூறியுள்ளார்.
மனைவியை ஆரத் தழுவி வாழ்த்துகளை தெரிவித்துள்ள அவர் அந்த புகைப்படத்தை ட்விட் டரில் பகிர்ந்துள்ளார்.
ஐ.ஆர்.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்ற அர்விந்த் கேஜ்ரிவாலும் சுனிதாவும் முசோரி பயிற்சி மையத் தில் முதல்முறையாக சந்தித்த னர். நாளடைவில் அவர்களிடையே காதல் மலர்ந்தது. பின்னர் இரு தரப்பு பெற்றோர் சம்மதத் துடன் திருமணம் செய்து கொண் டனர். அவர்களுக்கு திருமணமாகி 20 ஆண்டுகளாகிவிட்டன.
ஒரு கால கட்டத்தில் தன்னார்வ தொண்டு பணிகளில் ஈர்க்கப்பட்ட அர்விந்த் கேஜ்ரிவால், அரசுப் பணியை கைவிட்டு முழுநேர தொண்டுப் பணியில் இறங்கினார். குடும்ப பொறுப்புகளை சுனிதா தனது தோளில் தாங்கிக் கொண் டார்.
கடந்த 2013 டெல்லி சட்டப் பேரவைத் தேர்தலில் யாரும் எதிர் பாராத வகையில் 70 தொகுதிகளில் 28 இடங்களைக் கைப்பற்றி ஆம் ஆத்மி சாதனை படைத்தது. 49 நாட்களில் முதல்வர் பதவியை கேஜ்ரிவால் துறந்தார். அதைத் தொடர்ந்து மக்களவைத் தேர் தலில் ஆம் ஆத்மி கடும் பின்ன டைவைச் சந்தித்தது.
அரசியல் வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களில் தோளோடு தோள் நின்று, குடும்ப பாரத்தையும் சுமந்து வரும் தனது மனைவி சுனி தாவை ட்விட்டரில் கேஜ்ரி வால் வெளிப்படையாக பாராட்டி யுள்ளார்.
பொதுவாக பொது இடங்க ளுக்கு சுனிதா அதிகம் வருவ தில்லை. ஆம் ஆத்மியின் நேற்றைய வெற்றிக் கொண்டாட் டங்களில் கேஜ்ரிவாலுடன் சுனிதாவும் சேர்ந்து கொண்டார். அப்போது மனைவியை ஆரத் தழுவி தனது வாழ்த்துகளை கேஜ்ரிவால் பகிர்ந்து கொண்டார்.