Published : 06 Feb 2015 11:01 AM
Last Updated : 06 Feb 2015 11:01 AM

போக்குவரத்து ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை எப்போது?

தமிழக அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு புதிய ஊதிய ஒப்பந்தம், பணிநிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை ளை வலியுறுத்தி கடந்த டிசம் பர் மாதம் 28-ம் தேதி முதல் 31-ம் தேதி வரையில் வேலை நிறுத்தம் நடந்தது. பின்னர், போக்குவரத்து துறை அமைச் சருடன் நடந்த பேச்சுவார்த் தையில் உடன்பாடு ஏற்பட்டு வேலை நிறுத்தம் வாபஸ் பெறப் பட்டது.

இதையடுத்து, கோரிக்கை கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த11 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அறிவித்தது. ஒரு மாதம் நெருங்கவுள்ள நிலை யில், இந்த குழுவினர் தொழிற் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இதனால், அதிருப்தியடைந்துள்ள போக்கு வரத்து ஊழியர்கள் சங்கங்கள் ஆலோசனை நடத்தினர். கடந்த 4-ம் தேதி தமிழகம் முழுவதும் போக்குவரத்து கழக மண்டல அலுவலகங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மேலும், தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்த தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

இந்நிலையில், போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக அரசு அமைத்துள்ள குழு பேச்சுவார்த்தை நடத்துவதற் கான தேதியை ஓரிரு நாட்களில் தமிழக அரசு வெளியிடும் என கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x