நாகாலாந்து முதல்வர் ஜீலியாங் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி

நாகாலாந்து முதல்வர் ஜீலியாங் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி
Updated on
1 min read

நாகாலாந்தில் முதல்வருக்கு எதிராக கொணரப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில், முதல்வர் டி.ஆர். ஜீலியாங் வெற்றி பெற்றார். மொத்தம் 60 உறுப்பினர்களைக் கொண்ட அவையில் அவருக்கு ஆதரவாக 59 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

நாகாலாந்து மாநிலத்தை, நாகாலாந்து மக்கள் முன்னணி ஆண்டு வருகிறது.

இக்கட்சிக்கு 38 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதில், 22 பேர் முதல்வர் பதவியிலிருந்து ஜீலியாங்கை நீக்கக் கோரி வந்தனர். இதையடுத்து, சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரைக் கூட்ட ஆளுநர் பி.பி.ஆச்சார்யா சம்மன் அனுப்பினார்.

அப்போது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், ஜீலியாங் வெற்றி பெற்றார்.

இதுதொடர்பாக ஜீலியாங் கூறும்போது, “உண்மை வெளி வந்துள்ளது. சிலரால் மேற் கொள்ளப்பட்ட தவறான பிரச் சாரத்தால் ஏற்பட்ட குழப்பத்தை நீக்கவும், பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் நானாக முன்வந்து நம்பிக்கை வாக்கெடுப்பை கொண்டுவந்தேன்” என்றார்.

கட்சி பாகுபாடின்றி, பேரவைத் தலைவர் ஒருவரின் வாக்கைத் தவிர அனைத்து எம்.எல்.ஏக்களும் ஜீலியாங் முதல்வராகத் தொடர்வதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

பாஜகவில் 4, காங்கிரஸில் 8 பேர் உட்பட அனைவரும் முதல்வருக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

முன்னதாக, நாகாலாந்து மக்கள் முன்னணி எம்எல்ஏக்கள் சிலர், ஜி.கெய்ட்டோ ஆயே என் பவரை முதல்வராக்க வேண்டும் எனக் கோரி கிளர்ச்சியில் இறங்கினர். அவர்களுக்கு அக் கட்சியின் மக்களவை உறுப்பினர் நெய்ப்பியு ரியோ ஆதரவாக இருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in