Last Updated : 06 Feb, 2015 01:05 PM

 

Published : 06 Feb 2015 01:05 PM
Last Updated : 06 Feb 2015 01:05 PM

தேவாலயங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த டெல்லி காவல்துறைக்கு ராஜ்நாத் உத்தரவு

டெல்லியில் தேவாலயங்கள் மீதான தாக்குதல்கள் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளித்த பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேவாலயங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

டெல்லியில் தொடர்ந்து தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கிறிஸ்தவ மதத் தலைவர்கள் கூட்டமைப்பினர், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை வெள்ளிக்கிழமை சந்தித்து வலியுறுத்தினர்.

இதனை அடுத்து அவர், "டெல்லியில் உள்ள தேவாலயங்கள், மற்ற மத வழிப்பாட்டுத் தளங்கள் ஆகியவற்றின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறை ஆணையத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.

ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசிய கிறிஸ்தவ மதத் தலைவர்களுள் ஒருவரான ஜான் தாயலும் இதனையே செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

டெல்லியில் சில மாதங்களாக தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது அதிகமாகி வருகிறது. இத்துடன் சேர்ந்து, குறுகிய கால இடைவெளியில் ஐந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிறிஸ்தவ அமைப்புகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றன.

இது தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையிலும், மனித உரிமை ஆணைய உறுப்பினர் நீதிபதி சிரியாக் ஜோசப் சம்பவ இடத்தைப் பார்வையிட்டதன் அடிப்படையிலும் தேசிய மனித உரிமை ஆணையம் தானாகவே முன்வந்து பாதுகாப்பு அமைச்சகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x