Published : 20 Feb 2015 12:34 PM
Last Updated : 20 Feb 2015 12:34 PM

டெல்லியில் ரூ.15 லட்சம் தொகையுடன் ஏடிஎம் மெஷின் கொள்ளை

டெல்லியின் வஸிராபாத் பகுதி கார்ப்பரேஷன் வங்கியின் ஏ.டி.எம். மெஷின் சுமார் ரூ.15 லட்சம் பணத்தோடு கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து திமார்ப்பூர் காவல் துறையினர் கூறும்போது, "வடக்கு டெல்லியின் வஸிராபாத்தில் உள்ள கார்பரேஷன் வங்கியின் ஏ.டி.எம் மெஷின் வியாழக்கிழமை காலை கொள்ளையடிக்கப்பட்டது. ஏடிஎம்-க்கு தினமும் இரவு 11 மணி வரை பாதுகாவலர் இருப்பது வழக்கம். அதற்கு மேற்பட்ட இரவு நேரத்தில் பாதுகாப்பு போடப்படுவதில்லை. இதனை பயன்படுத்தி கொள்ளையர்கள் காலை 2.30 மணியளவில் சுமார் ரூ.15 லட்சம் இருந்த ஏடிஎம் மெஷினை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

வழக்கம்போல காலை 6 மணிக்கு பணிக்கு வரும் பாதுகாவலர், அறையின் உள்ளே ஏ.டி.எம். மெஷின் இல்லாததை பார்த்து வங்கி அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார். பின்னர் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. ஏடிஎம் வாசலில் இருந்த சிசிடிவி கேமரா சிவப்பு டேப்பால் மறைக்கப்பட்டிருக்கிறது.

எனவே இந்த கொள்ளைச் சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது. கேமராவில் கொள்ளைச் சம்பவம் பதிவாகவில்லை. ஏ.டி.எம்-க்கு உள்ளே இருந்த மற்ற இரண்டு கேமராவிலும் காலை 2.30 மணிவரை மட்டுமே பதிவுகள் உள்ளன. அதன் பிறகு நடந்தச் சம்பவம் எதுவும் இடம்பெறவில்லை. இதைத் தவிர 7 கேமராக்கள் எடிஎம் அறைக்கு வெளியே பொறுத்தப்பட்டுள்ளன.

அவற்றிலிருந்து ஏதேனும் விவரம் கிடைக்கலாம் என்று நாங்கள் கருதுகிறோம். எங்களது யூகத்தின்படி கொள்ளையர்கள், இந்தச் சம்பவத்துக்கு அதிக நேரமோ அல்லது அவர்கள் பெரிதாகவே மெனக்கெடவில்லை. ஆகவே மிகவும் திட்டமிட்ட வகையில் அனைத்து உபகரணங்களுடனும் வந்து ஏடிஎம் மெஷினை கொண்டு சென்றுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் இது உள்ளூர்வாசிகளின் வேலையாக இருக்கலாம் என்று கருதுகிறோம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x