Published : 04 Feb 2015 10:05 AM
Last Updated : 04 Feb 2015 10:05 AM

தேசிய விளையாட்டு: தமிழகத்துக்கு 3 தங்கம்

கேரளாவில் நடைபெற்று வரும் தேசிய விளையாட்டு போட்டியில் தமிழகத்துக்கு 3 தங்கம், 6 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கம் கிடைத்துள்ளது.

ஆண்கள் பளுதூக்குதலில் தமிழகத்தின் சதீஷ்குமார் சிவலிங்கம் தங்கம் வென்றார். துப்பாக்கி சுடுதலில் மகளிர் அணி பிரிவிலும், டேபிள் டென்னிஸில் ஆண்கள் அணி பிரிவிலும் தமிழகத்துக்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.

மகளிர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆஸியா கில்ஜி வெண்கலம் வென்றார். இது தவரி நீச்சல், டேபிள் டென்னிஸ், டென்னிஸ் ஆகிய போட்டிகளில் தமிழக மகளிர் அணியினர் 4 வெண்கலப் பதக்கம் வென்றனர். ஆண்கள் பளு தூக்குதலில் ரங்கராஜன் வெண்கலம் வென்றார்.

பதக்கப் பட்டியிலில் 14 தங்கத்துடன் ஹரியானா முதலிடத்தில் உள்ளது. போட்டியை நடத்தும் கேரளா 5 தங்கத்துடன் 4-வது இடத்தில் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x