ஜேட்லியின் பட்ஜெட் உரையில் முதலீடு 60 நாட் அவுட்!

ஜேட்லியின் பட்ஜெட் உரையில் முதலீடு 60 நாட் அவுட்!
Updated on
1 min read

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் அருண் ஜெட்லி ‘முதலீடு’ ('Investment') என்ற வார்த்தையை சுமார் 60 முறை பயன்படுத்தினார்.

அதே போல் மோடி அரசின் தாரக மந்திரமான ‘வளர்ச்சி’ (growth) என்ற வார்த்தையை சுமார் 27 முறையாவது பயன்படுத்தியிருப்பார்.

ஜூலை 2014-இல் பட்ஜெட் உரையில் அருண் ஜேட்லி ‘முதலீடு’ என்ற வார்த்தையை சுமார் 34 முறை பயன்படுத்தியிருந்தார்.

அதேபோல் உரையில் இடையிடையே ‘ஈஸ் ஆஃப் டூயிங் பிசினஸ்’ அதாவது 'வர்த்தகம் செய்ய சுலபம்' என்ற சொற்றொடரையும் அவர் அடிக்கடி பயன்படுத்தினார். குறைந்தது 10 இடங்களிலாவது இதனை அவர் பயன்படுத்தியிருப்பார்.

ஆனால் இன்றைய இணைய உலகில் கூறப்படும் திறவுச் சொல்லாக முதலீடு என்ற சொல்லே ஜேட்லியின் உரையில் ஆதிக்கம் செலுத்தியது.

வர்த்தம் செய்ய சுலபமான நாடுகள் என்ற உலக வங்கியின் தரவரிசைப் பட்டியலில் 189 நாடுகளில் இந்தியா மிகவும் தாழ்வான 142-வது இடத்தையே பிடித்திருந்தது. இதனையடுத்தே அருண் ஜேட்லி 'ஈஸ் ஆஃப் டூயிங் பிசினஸ்' என்ற வார்த்தைக்கு பட்ஜெட் உரையில் அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இது தவிர, ‘வளர்ச்சி’, ‘உள்கட்டமைப்பு’, 'அயல்நாட்டு முதலீடுகள்' போன்ற வார்த்தைகளும் இவரது இன்றைய உரையில் மீண்டும் மீண்டும் வந்தவண்ணம் இருந்தன.

முதலீடு என்ற வார்த்தையை 60 முறை ஜேட்லி பயன்படுத்தினாலும் கடந்த பட்ஜெட்டில் 34 முறை பயன்படுத்திய ‘வளர்ச்சி’ என்ற வார்த்தை இம்முறை 27 முறையாக பின்னடைவு கண்டது.

இதற்கு முன்னதாக, ப.சிதம்பரம் பிப்ரவரி 2014-ல் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யும் போது 'வளர்ச்சி' என்ற வார்த்தையை 32 முறை பயன்படுத்தினார். ஆனால் ‘முதலீடு’ அவரால் 11 முறையே பயன்படுத்தப்பட்டது.

வேலைகள், திறமைகள், இளையோர், கார்ப்பரேட், ஏழை போன்ற வார்த்தைகள் ஆங்காங்கே குறிப்பிடப்பட்டன. ஆனால் ‘நெருக்கடி’ (Crisis) என்ற வார்த்தை இம்முறை ஜேட்லியின் உரையில் இடம்பெறவில்லை.

ஆகவே அவரது முக்கிய வார்த்தைகளைக் கொண்டு பார்த்தால் பாஜக பட்ஜெட் எதை, யாரை நோக்கியது என்று புரிந்து கொள்ள முடிகிறதல்லவா?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in